தமிழ் அறிவுச்சோலை
மில்ரன் கீன்ஸ் தமிழ்ப் பாடசாலை
தமிழ் அறிவுச்சோலை பிரித்தானியாவில் மில்ரன் கீன்ஸ் நகரில் இயங்கி வருகிறது. அறிவுச் சோலையின் நோக்கம் நம் எதிர்காலச் சந்ததிக்கான எம் தாய்மொழியாகிய தமிழ் மொழியைக் கற்பிப்பதோடு மட்டுமல்லாது எமது கலை, பண்பாட்டு விழுமியங்களை கற்பிப்பதுமாகும்.
அதிபாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மில்ரன் கீன்ஸ் நகரில் அதிகூடிய கால அனுபவம் மிக்க ஆசிரியர் குழுவால் கற்பிக்கப்படுகிறது.
தமிழ் மொழி பாடநூல்களுடன் Cambridge O Level/ A Level Tamil பரீட்சைக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்தக் கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் (2025/2026) பெற்றோர்களிடமிருந்து அறவிடப்பட மாட்டாது.
தமிழ் அறிவுச்சோலையில் இந்தக் கல்வியாண்டுக்கான தவணைக் கட்டணம் (2025/2026) பெற்றோர்களிடமிருந்து அறவிடப்பட மாட்டாது என்பதனை மிக மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இடம் : Down Barns School, MK14 7NA
காலம் : சனிக்கிழமை தோறும்.
நேரம் : 09:45 am - 12:00pm

