தமிழ் அறிவுச்சோலை மில்ரன் கீன்ஸ்
புதிய தமிழ்ப் பாடசாலை ஆரம்பம்
மில்ரன் கீன்ஸ் நகரில் செயற்படும் தமிழ் அறிவுச்சோலை இலாப நோக்கமற்ற தமிழ்ப் பள்ளி ஆகும்.இது தமிழ்மொழி, தமிழரின் பண்பாடு, பாரம்பரியத்தைக் குழந்தைகளுக்கும் இளந் தலைமுறையினருக்கும் கற்றுத்தருவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிபாலர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை மாணவர்கள் கல்வி பயிலும்
தமிழ் அறிவுச்சோலை, அனுபவம் வாய்ந்த, அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வத் தொண்டர்களால் நடாத்தப்படுகிறது. இளம் சிறார்களின் மொழித்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி, அவர்களுக்குத் தமிழரின் மரபுகளையும், அறத்தையும் உணரச் செய்வது தமிழ் அறிவுச்சோலையின் நோக்கங்களுள் ஒன்றாகும்.
தமிழ் அறிவுச்சோலை மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தரமான பாடத்திட்டங்களையும்,
Cambridge O Level/ A Level தமிழ்ப் பரீட்சைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது.
தமிழ் அறிவுச்சோலை ஆரோக்கியமான, உற்சாகமான இளந்தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறது.
‘’தமிழால் உயர்வோம்’’

